Sunday, April 8, 2018

இன்றைய தமிழக சவால்கள்

இன்று (4/8/2018) நியூ ஜெர்சி தமிழ் சங்கம் நடத்திய "இன்றைய தமிழக சவால்கள்" கருத்தரங்கில் கலந்துகொண்டேன். சிறிய கூட்டம் என்றாலும் கருத்து செறிந்த கூட்டம் எனலாம்.

முக்கிய விவாதங்களாக அமைந்தவற்றை சுருக்கமாக பகிர்கிறேன்.

1. காவேரி  மேலாண்மை வாரியம் : 

~100 ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனை, மேலாண்மை வாரியம் அமைத்தால் சரியாகிவிடுமா? மேலாண்மை வாரியத்தில் ஊழல் இருக்காதா? இக்கேள்விகளுக்கு பதில் கேள்வி -  உச்ச நீதி மன்றம் தீர்ப்பை கூட மைய அரசு செயல்படுத்த தயங்குவது ஏன்? இதில் என்ன உள்நோக்கம்?

மற்ற நாட்டுடன் போட்ட உடன்படிக்கையை செயல்படுத்தும் நாம்,உள்நாட்டு வாக்கு வங்கிக்காக கபட நாடகம் ஆடுவது என்ன நியாயம்.

இப்போது காவேரி நீர் பயிருக்கு மட்டும் இல்லை, பல மாவட்டங்களுக்கு குடிநீரும் அதுதான்.இது தஞ்சை பிரச்சனை இல்லை, தமிழக பிரச்சனை.

விவசாய அறிஞர் சொன்னது என்னை நெகிழ வைத்தது.

பூமி மேலுள்ள தண்ணி மட்டும் தான் மக்களும் , மாக்களும் பயன்படுத்தவேண்டும். பூமி கீழுள்ள நீர் தாவரங்களுதுயது. அதை ஆழ் துளை போட்டு கொள்ளை அடிப்பது அறம் ஆகாது. 

அடடா, இத்தகைய அறநெறி உள்ள மண்ணில் பிறந்ததிற்கு நான் என்ன தவம் செய்தேனோ!

2. ஸ்டெர்லைட் தொழிற்சாலை : 

மாசு உயிரை கொல்கிறது என்று பலமுறை நிரூபணம் ஆகியும் சிலரின் ஆதாயத்துக்காக திணிக்கப்படும் முயற்சி. நிறுவனத்தின் ஒரே நோக்கம் லாபம் என்பது, பொறுக்க முடியாத வேதனை. தவறு இழைத்தவர்களின் இறுதி காலம் சொல்லும் நிச்சயத்தை.


3. நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் : 

இன்னொரு இயற்கை அழகை நகரமாக்கும் முயற்சி. இதனால் வரும் நன்மையை உறுதி செய்ய  முடியாவிட்டாலும், தீங்கையாவது தடுக்கலாம்.இம்முயற்சிக்கு இந்த இடம் மட்டும் தான் தேர்வு என்பதை எக்காலமும் ஏற்க முடியாது. யாரவது தந்து தானே ஆக வேண்டும் என்றால், அது எம்மக்களை ஏன் பலிகடா ஆக்க வேண்டும் என்றல்லவா கேள்வி எழுகிறது?

என் தனிமனித பங்களிப்பாக நான் பார்ப்பது, களத்தில் இருந்து போராட முடியாவிட்டாலும், இச்சவால்களை பற்றிய புரிதலும், மனப்பூர்வமான ஆதரவு மற்றும் பிரார்தனைகளைகளும், இம்மண்ணில் பிறந்து வளர்ந்ததுக்கு கடமையாக பார்க்கிறேன்.

இப்போராட்டங்களை நான் வெறும் விபத்தாக நடக்கும் கடினங்களாக பார்க்கவில்லை. மாற்றத்திக்கு நடக்கும் முன்னோட்டமாகவும், மக்கள் விழிப்புர்ணர்வுக்கு கிடைக்கும் வாய்ப்பாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன்.

1 comment:

Anonymous said...

This gambling website also hosts progressive jackpot slots you can to|you presumably can} play to potentially hit it big. I all the time play the machine for quantity of} spins just to see if the successful cycle continues. But it's safest not to spend an excessive amount of} time taking part in} after you've won, as you are more likely to|prone to} lose cash. Be sure you all the time have your membership card inserted in your slot machine earlier than you spin. Our high decide 점보카지노 is Popinata, a 96% RTP slot recreation with a Mexican get together theme that was developed by RealTime Gaming. It’s a 50-reel slot that comes with 5 pay-lines and a max payout of a hundred twenty five,000.