Saturday, January 19, 2008

இந்த வார அறிவு தீனி!

  1. வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி; உள்ளே அடக்கிய கோபம் வெறிக்கு வழி!

  2. சாது மிரண்டால் காடு தங்காது. பொறுமையுள்ள மனிதனின் கோபத்தை பற்றி எச்சரிக்கையாக இரு!

  3. மனிதனின் குறைபாடுகளை கூறி கொண்டு இருப்பவன், கடவுளையே கண்டிக்கிறான்!

  4. நெஞ்சிலே குற்றம் உள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும் தன்னையே பார்ப்பதாக எண்ணுகிறார்கள்

  5. குற்றத்தை தொடர்ந்து அச்சம் வரும், அதுவே தண்டனையாகும்!

  6. வலிமையற்ற உணர்ச்சியே கோபம்

  7. சட்டம் ஒரு எலிப்பொறி; உள்ளே செல்வது எளிது, வெளியே வருவது கடினம்

  8. சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை ஆபத்தனவை!

  9. பேசும் முன் இருமுறை சிந்திக்கவும்

Monday, January 7, 2008

வள்ளுவன் வழி-1

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்!




இனிய உளவாக இன்னாது கூறல்

கனியிருப்ப காய்கவர்ந் தற்று!

வெற்றி வழி!

ஒரு இலட்சியத்தை எடுத்து கொள்ளுங்கள்.அதையே உங்கள் வாழ்க்கையாக கொள்ளுங்கள்.அதையே நினையுங்கள், அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த இலட்சியத்தால் நிறையட்டும். பிற கருத்துகள் அனைத்தையும் அடியோடு விட்டு விடுங்கள். இதுவே வெற்றிக்கு வழி.

- சுவாமி விவேகானந்தா

Saturday, January 5, 2008

இந்த வார நம்பிக்கை மொழிகள்!

  1. எப்படி செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கிறது!
  2. இன்பத்தை ஒழுக்கத்தின் மீது தான் அமைக்க முடியும்!
  3. இருட்டுக்குள் இருந்து கொண்டு வெளிச்சம் தருவதே புகழ்!

Tuesday, January 1, 2008

இனிய புத்தாண்டு 2008 நல்வாழ்த்துகள்!

  • இறப்பு ஒரு சகஜமான,தவிர்க்க முடியாத பயண நிறைவு என எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்!

  • அடுத்த விநாடி அதிசயங்கள் ஏராளம்; அதனால்,இந்த நிமிட வாழ்வை நிதானித்து செலவிடுங்கள்!

  • வாழ்வின் அற்புதத்தை, வெறுமனே வெட்கம், வெறுப்பு, பயம் கொண்டு நிரப்பாதிர்கள்!

  • உலக இயக்கம் அபாரமானது! அதில் தர்க்க அறிவால் அறிந்தது ஒரு சிறு பகுதியே என உணர்வாய்!

  • நம்பிக்கை! நம்பிக்கை! இதுவே உண்மை அறிவின் இரகசியம்!