Sunday, December 30, 2007

சளியை போக்கும் யோகா!

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் மூக்கில் குளிர்ந்த நீரை உள்ளிழுத்து தொண்டை வழியாக வெளிப்படுத்த வேண்டும்.

இதனால், தலைவலி நீங்கும்; சளி பிடிக்காது; மூளை இதமாக இருக்கும்.

- ராஜா யோகத்தில் சுவாமி விவேகானந்தா

Font courtesy:
http://www.google.com/transliterate/indic/Tamil

நாடி சுத்தம்!

நாடி சுத்தம்!

வலது நாசியை பெருவிரலால் அடைத்துக்கொண்டு இடது நாசி வழியாக இயன்ற அளவுக்கு காற்றை உள்ளே இழுத்துகொள்.பின்னர் சிறிதும் இடைவேளை இல்லாமல் இடது நாசியை மூடிக்கொண்டு வலது நாசி வழியாக காற்றை வெளியேற்று. அதன் பிறகு வலது நாசி வழியாக இயன்ற அளவு காற்றை உள்ளே இழுத்து, இடது நாசி வழியாக வெளியே விடவும்.

இந்த பயிற்சியை நாள்தோறும் மூன்று அல்லது ஐந்து முறை - அதிகாலை , நண்பகல், மலை , நள்ளிரவு ஆகிய நான்கு காலங்களில் செய்ய வேண்டும்.

- ராஜா யோகத்தில் சுவாமி விவேகானந்தா

Saturday, December 29, 2007

உடல் - மனம் பகிர்வு!

எப்போதும் உடல், மனம் இரண்டும் ஒரே நேரத்தில் சோர்வடைவதில்லை.இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே, ஒரு நேரத்தில் மந்தமாகும்,


உடல் சோர்வை மனதாலும், மனச்சோர்வை உடலாலும் கையாண்டால் வாழ்வு என்றும் இனிமையே!

எப்படி?

மனதை எப்போதெல்லாம் லேசாக சோம்பேறித்தனம் தொற்ற ஆரம்பிக்கிறதோ [உதாரணமாக , கொஞ்சம் தூங்கினால் என்ன?, கொஞ்சம் குடித்தால் என்ன?, அதிக உணவு, அதிக போதை, பொழுது போக்கு, கோபம், வெறி, இன்னும் பல]
உடனே உடலுக்கு சற்று அதிக உழைப்பை தாருங்கள், ஆடலாம், பாடலாம், உடற் பயிற்சி செய்யலாம்,

ஏதேனும் தகுந்த ஒரு உடல் உழைப்பு செய்ய ஆரம்பித்தால், உடல் உடனே அதன் இன்ப, துன்பங்களை மனதுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கும். இதனால் மனதின் சில நொடி நேர மந்தம் நீங்கி புத்துணர்ச்சி பெரும்.

இதேபோல், உடல் சோர்வடையும் போது, தியானம் செய்யுங்கள்! பிராணாயாமம் பழகுங்கள்! கோவிலுக்கு செல்லுங்கள்!

- பரமஹம்ச நித்யனந்தா!