Tuesday, July 14, 2009

எந்நிலையிலும் நிறைவு காணா மனிதன்!

அமெரிக்க வாழ்வை பற்றிய சுவையான ஆனால் சோகமான உண்மை.

வாரத்தில் ஐந்து நாட்கள் புற நகர் ரயில் வண்டியில் முப்பது நிமிடம் பயணம் செய்து, இருபது நிமிடம் மிக பிசியான சாலைகளில் நடந்து சென்று நியூ யார்க் நகரில் ஒரு பொருளாதர நிறுவனத்தில் கணினி வல்லுனராக பணி செய்யும் ஒரு இளைஞன் ஒரு மாதத்தில் என்ன காண்கிறான்?

- இறப்பை காணவில்லை.
- பிறப்பை கேட்கவில்லை.
- நோயளிகளிகளை எப்போது பார்த்தேன் என்று நினைவில்லை. (சாதாரண சளியையும் சேர்த்து)
- விபத்தை பார்க்கவில்லை.
- இயலாத முதியவரை காணவில்லை.
- பிச்சை எடுப்பவரை எங்கோ பார்த்ததாக நினைவு.
- புகை கக்கும் வண்டிகள் எதுவும் இல்லை.
- ஒரு பைசா லஞ்சம் கொடுக்கவில்லை.
- யாருக்கும் உதவ இல்லை
- அதிக பட்சம் 5000 வார்த்தைகள் பேசியிருப்பான். 10000 வார்த்தைகள் கேட்டு இருப்பான்.
- கடவுள் என்ற வார்த்தை - God bless america - என்பதில் மட்டுமே கண்டான்.
- கோவிலுக்கோ/ சர்ச்சுக்கோ போனதில்லை.
- ஒரு நாளைக்கு 12-15 மணி நேரம் internet உடன்.
- உறவினர்கள் எவருடனும் நேரடி பேச்சு இல்லை
- யார் வீட்டிலும் சாப்பிட்டதில்லை. யாரையும் சாப்பிட அழைக்கவில்லை. [காபியும் கூட]
- அரசாங்கத்தை பழிக்கவில்லை
- சண்டை/ வம்புகள் எதுவும் பார்க்கவில்லை.
- ஒரு நொடி கூட மின்சாரம் அணையவில்லை.
- 8-10 முறை தொலைபேசி அழைப்பு வந்தது. 15-20 முறை தொலைபேசி அழைப்பு போனது.
- தியானம்/ யோகா எதுவும் இல்லை.
- பள்ளி செல்லும் குழைந்தைகளை பார்க்கவில்லை,.
- கணினி தவிர, வேறு தொழில் செய்யும் நபருடன் நேரடியாக பேச வில்லை
- ஏழை என்று எவரையும் பார்த்ததில்லை. எவரும் சொல்லி கேட்கவில்லை.

இன்னும் பல, இந்தியாவிற்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்வின் லட்சணங்களுடன் மாதந்தோறும் சம்பளத்திற்கான வாழ்க்கை.

பெரும்பான்மையான செய்திகள் மகிழ்ச்சியே எனினும், இதே வசதிகளுடன் வாழும் வாழ்க்கை எந்த அளவிற்கு வாழ்வின் உண்மையை அறிய உதவும் என்பதே கேள்வி.

இவற்றை பார்க்கும் என்நாட்டு அடித்தட்டு மக்கள், இதை விட சொர்க்கம் உண்டோ என்பார்கள், ஆனால் இவ்வளவு வசதிகளையும் "take it granted" ஆக எடுத்து கொண்டு, இன்னும் மனவளர்ச்சி யின்றி , குறை கண்டு வாழும் இந்நாட்டு "மன்னர்களை" என்ன சொல்ல?

உலக மனித குலம் அனைத்திற்கும் சமமான வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கும் நாளும் உண்டோ?

அதைவிட முக்கியமாக, எந்நிலையிலும் நிறைவு காணா மனிதனை காப்பாற்ற கடவுள் தான் வருவாரா?

No comments: