Sunday, February 17, 2019

உனக்காக நில்லு ! சந்தோஷம் கொடுக்காத எதுனாலும் தள்ளு !

கவிஞர் விவேக் எழுதி, சமீபத்தில் வெளியான "பேட்ட" படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள்.

மேலோட்ட சிந்தனையில் இவை வெறும் சுயநல வார்த்தைகளாய் தெரிந்தாலும், சற்றே ஆராய்ந்தால் இதன் ஆழம் வெளிப்படும்.

நம்மின் ஒவ்வொரு நொடியும் நமது முதன்மை குறிக்கோளுக்காகவே செலவிடப்படுகிறது. அது சுய நினைவுடன் செய்தாலும் சரி,  இல்லாவிட்டாலும் சரி.

நமது செயல்கள் நமக்கு சுகத்தை, அமைதியை, இன்பத்தை தரவில்லை என்றால்,

  1. நாம் உண்மையில் நம் நன்மையை முன்னுரிமை ஆக்கவில்லை என்றோ
         அல்லது
  2. நமக்கு எது நன்மை என்றே  தெரியவில்லை என்றோ தான் அர்த்தம்.

என்னை பொறுத்த வரையில், எப்போதெல்லாம் என் உடலும், மனமும், ஆற்றலும் என் முழு கட்டுப்பாற்றில் உள்ளதாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் முழு இன்பத்தில் திளைக்கிறேன்.

இவை மூன்றும் ஒரு நிலையில் இருக்கையில் அமையும் "சலனமற்ற தன்மை" எதையும் தாங்கவும், எதையும் எதிர்கொள்ளவும் துணிவையும், நம்பிக்கையையும் தருகிறது.

விபாசனா தியானம், "சலனமற்ற தன்மை" அடைய முற்றிலும்  வித்யாசனமா, மிக எளிய, தத்துவும் எதுவும் இல்லாத, சமய நெறிகளை கடந்த வழியை காட்டுகிறது.

அறிவியல் அடிப்படையும், மனவியல்  அடிப்படையிலும் நிரூபிக்க பற்ற உண்மை - நம்மின், எல்லா துன்பங்களும், இன்பங்களும் நமது உணர்வுகளாலேயே நாம் அறிகிறோம். 

இம்முறையில், ஒருவர் அவர் உடலின் உள்ள ஒவ்வொரு பகுதியையும் உற்று கவனித்து அதன் உணர்ச்சிகளை எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி உணர முயல்கிறார்.

உடலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளை தருகின்றன. இதனால், இத்தியானத்தை தொடர்ந்து செய்யும் ஒருவர், அவரின் பெரும்பான்மையான உணர்ச்சிகளை தன் முயற்சியால் முழுமையாய் அறிகிறார்.  எல்லா உணர்ச்சிகளும் ஒரே இயல்பாய் - சிறிது நேரம் மட்டுமே நிலைக்கும் - இருப்பதையும் அறிகிறார்.

இதே உணர்ச்சிகள், வெளி உலகால் நடக்கும் நிகழ்வுகளால்  அமையும் பொது,  அதன் உண்மை தன்மை  - சிறிது நேரம் மட்டுமே நிலைக்கும் -  முன்னமே தெரிந்தனனால்  - அவர் உணர்ச்சிகளுக்கு அடிமை ஆவதில்லை.

இதனால் அவர் அவரின் குறிக்கோளில் சலனமின்றி செயலாற்ற முடிகிறது. அவரின் உடல் , மனம் , ஆற்றல் கட்டுப்பற்றிக்கு வருகிறது.

இதைப்போலவே எத்தனையோ வழிகளை, நம் முன்னோர்கள் நமக்கு வடிவமைத்து அமைத்துள்ளார்கள். இதை நாள்தோறும் பழகாமல் இருப்பது நமக்கு நாமே செய்யும் அநீதியாகும்.

நாம் உண்மையிலே, நம் இன்பத்தில் நாட்டம் கொண்டால், இதை தவிர பிற செயல்கள் எல்லாம் அடுத்த கட்டமே.  இப்பாட்டை போல  "சந்தோஷம் கொடுக்காத எதுனாலும் தள்ளுவோமாக"!